'திராவிட மாடல்'என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; நாடு முழுவதும் பரவிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திராவிட மாடல் என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; நாடு முழுவதும் பரவிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்களை வெற்றிகரமாகவும், தொடர்ச்சியாக நடத்த வேண்டும். ஜூன் 3ல் கலைஞரின் 99வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, பொன்முடி, ஆலந்தூர் பாரதி உள்ளிட்ட தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மேடையில் மு.க.ஸ்டாலினுடன் அமர்ந்து இருந்தனர்.

பின்னர், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்த ஓராண்டில் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் அரசின் நிதிநிலைமை மேம்பட்டுள்ளது; பணவீக்கம் குறைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மக்களிடையே திமுகவுக்கு செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது என்று தெரிவித்தார். திமுக ஆட்சியின் சாதனைகளையும், கழகத்தின் வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

Related Stories: