பனமரத்துப்பட்டி பகுதியில் மழையால் சாய்ந்த வாழை மரங்கள்

சேலம் : பனமரத்துப்பட்டி சுற்றியுள்ள பகுதியில் ெபய்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

சேலம் பனமரத்துப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் நூறு ஏக்கருக்கு மேலாக வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு பலத்த சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. பனமரத்துப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் பத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த 15 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டுக்கு மேலாக வாழை பயிரிடப்பட்டு இறுதியாக அதற்கான பலனளிக்கும் நிலையில் மரங்கள் சாய்ந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சாய்ந்துள்ள வாழை மரங்களை அகற்றும் பணிக்கும் ஏக்கருக்கு ₹20 ஆயிரம் மேல் செலவாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: