விழுப்புரம் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு-விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சரமாரி புகார்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் மோகன் தலைைமயில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குநர் ரமணன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது, முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீசர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வைத்துள்ள நிலுவைத்தொகை, வெட்டுக்கூலி, வண்டிவாடகையை உடனடியாக வழங்கிட வேண்டுமென தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த ஆட்சியர் மோகன், நிலுவைத்தொகை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 7ம் தேதிவரையுள்ள நிலுவைத்தொகை ரூ.27 கோடி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளத் தொகையை வரும் 7ம்தேதிக்குள் வழங்கிட ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம் தட்டுப்பாடு உள்ளது. மார்க்கெட் கமிட்டிகளில் சரியாக பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை.

இதுகுறித்து மார்க்கெட்கமிட்டி செயலாளரிடம் முறையிட்டாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. நல்ல மழைபெய்துள்ள நிலையில், தட்டுப்பாடின்றி விதைகள் கிடைக்கவும், தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி, பழமரம் விதைகளை வழங்கிடவேண்டும். வேளாண் பொறியியல்துறையில் உள்ள வாகனங்களை வெளிமாவட்டத்திற்கு அனுப்புகின்றனர். என்றனர். இதற்கு பதிலளித்த ஆட்சியர், உரங்கள் தட்டுப்பாடுள்ள பகுதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி கூட்டுறவு சங்கங்களில் உரத்தட்டுப்பாடு இல்லாத வகையில் நடவடிக்ைக எடுக்கப்படும். மார்க்கெட் கமிட்டிகளில் உடனடியாக பணப்பட்டுவாடா செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விதைகள் கிடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், ஏரிகளில் வண்டல்மண் எடுப்பதற்கான ஆணை வழங்கிடவேண்டும். அன்ட்ராயநல்லூர் முதல் எல்லீஸ்சத்திரம் வரை தென்பெண்ணை ஆற்றில் மணல்குவாரி அமைக்க அனுமதிகக்கக்கூடாது. மும்முனை மின்சாரம் சரியாக வழங்காததால் விவசாயப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ெதரிவித்தனர். இதற்கு பதிலளித்த மின்வாரிய அதிகாரிகள் பகலில் 8 மணிநேரம், இரவில் 6 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும், விவசாயிகள் ெதரிவித்த கோரிக்கைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

தண்ணீர் வருமா, வராதா அதிகாரிகள் மாறுபட்ட பதில்

விவசாயிகள் கூட்டத்தில் பேசிய முத்துமல்லா, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சேதமடைந்திருப்பதால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கும்போது ஆழங்கால் வாய்க்காலில் தண்ணீர் வருமா என்று அதிகாரிகளிடம் கேட்டிருந்தோம். அணைக்கட்டு முற்றிலும் சேதமடைந்ததால் வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர். இதனால், பலகிராமங்கள் பாதிக்கப்படுவதாக கூறினர். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை பெண் அதிகாரி, அணையை தற்காலிகமாக சீரமைக்க ரூ.1.03 கோடி ஒதுக்கப்பட்டது. இதை வைத்து எதுவும் செய்யமுடியாது.

புதிதாக அணைக்கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்குஅ றிக்ைக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் வந்தாலும், ஆழங்கால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விவசாயியிடம் முன்பு, தண்ணீர் வராது என்றும், ஆட்சியர் முன்னிலையில் வரும் என்றும் அதிகாரி மாறுபட்ட பதில் கூறியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பொதுப்பணித்துறை அதிகாரிக்கு டோஸ்

கூட்டத்தில், விவசாயி ஒருவர் கூறும்போது, ஆழங்கால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து புகார்அளித்து வருவதாகவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். உடனே, ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை உதவி பொறியாளரை எழுப்பி பதில் கூறுமாறு தெரிவித்தார். அப்போது, ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறிவிட்டு, அருகில் இருந்த பெண் அதிகாரியிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இதனால், கோபமடைந்த ஆட்சியர் ஆங்கிலத்தில் பேசி செமடோஸ் விட்டதால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: