கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரயில்வே பாலம் நடைபாதையில் கிடக்கும் ஜல்லி கற்கள்-அகற்ற ஊழியர்கள் வலியுறுத்தல்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் குறுக்கே ரயில் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தில் ஓரத்தில் ரயில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நடந்து சென்று வேலை பார்க்கும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.ரயில் பாதையையொட்டி பாலத்தில் அமைந்துள்ள இந்த நடை பாலத்தில்தான் ரயில்வே துறையில் வேலை பார்த்துவரும் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நடந்து சென்று பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் பாதையை அவ்வப்போது சோதனை செய்யும்போது டிராலி என்ற இயந்திரத்தின் வழியே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரும்போது அவசர காலத்தில் அந்த ட்ராலியை எடுத்து பாலத்தின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் வைத்துவிடுவார்கள்.

பின்னர் ரயில் சென்றவுடன் அந்த ட்ராலி என்ற இயந்திரம் மீண்டும் ரயில் பாதையில் பொருத்தப்பட்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவர்களின் பணியை தொடர்ந்து செய்து வருவது இயல்பாக உள்ளது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் மார்க்கமாக செல்லும் ரயில் பாதையில், ஆய்வு செய்து சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில் பாலத்தையொட்டி உள்ள நடைபாதையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள தண்டவாளங்கள் மற்றும் ஜல்லிகள் அப்படியே இருப்பதால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நடந்து செல்லும்போது சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து கடந்த 20 நாட்களாக ரயில் பாலத்தின் நடைபாதை மேல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தண்டவாளங்கள் மற்றும் ஜல்லிகளை அகற்றி சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: