வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை அதிகரிப்பு-குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

வேலூர் : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் உள்ள ஏரியில் இருந்து இரவு நேரங்களில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் புகார் கூறினர்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ ராமமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திரபிரதாப் தீட்சித், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:

விவசாயி: பேரணாம்பட்டு ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் ஏரி பாழாகிறது.

கலெக்டர்: மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயி: குடியாத்தம் பகுதியில் நெல் கொள்முதல் செய்ய விஏஓக்களுக்கு ஐடி பாஸ்வேர்டு வரவில்லை என்று கூறுகின்றனர்.கலெக்டர்: உடனடியாக ஐடி பாஸ்வேர்டு பெற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.விவசாயி: மகிமண்டலத்தில் சிப்காட் நிலம் கையகப்படுத்தக்கூடாது. ராணிப்பேட்டையில் ஏற்கனவே சிப்காட்டுக்காக கையகப்படுத்திய நிலங்கள் பயன்படுத்தாமல் உள்ளது. விவசாயி: கருகம்பத்தூரில் குப்ைபகள் அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது.

கலெக்டர்: சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயி: பேரணாம்பட்டு ஏரி 66 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த ஏரியை 70 ஆண்டுகளாக தூர்வாரவே இல்லை. ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் மணல் கொள்ளை அதிகளவில் உள்ளது. கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயி: கோவிந்தரெட்டிபாளையத்தில் ரேஷன் கடையில் 2 மாதமாக பாமாயில், மண்ணெண்ணெய் வழங்கவில்லை. டிஆர்ஓ: பாமாயில் தட்டுப்பாடில்லை, மண்ணெண்ணெய் குறைந்த அளவுதான் வருகிறது. உங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சாப்பாடு ₹20க்கு, டீ ₹5க்கு வழங்க கோரிக்கை

வேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சாப்பாடு ₹20க்கும், டீ ₹5க்கும் வழங்க வேண்டும். மேலும் நெல் கொண்டு வரும் விவசாயிகள் இயற்கை உபாதை கழிக்க முடியவில்லை. அங்குள்ள கழிவறைகளும் பூட்டப்பட்டுள்ளது. போதிய வசதிகள் இல்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதற்கு கலெக்டர், மகளிர் குழுமூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிவறை வசதி ஏற்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அனுமதியின்றி மாடுவிடும் விழா நடந்தது எப்படி?

காட்பாடி அடுத்த லத்தேரியில் அனுமதியின்றி, தடுப்புகள் அமைக்காமல் மாடுவிடும் விழா நடத்தப்பட்டது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விவசாயி ஒருவர் புகார் கூறினார். அதற்கு கலெக்டர்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Related Stories: