பசுமை பயண விழிப்புணர்வு: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு

ஆவடி: பசுமை பயண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவடியில் இருந்து முல்லை பெரியார் அணைவரை மாற்றுத்திறனாளி அருண் மூன்று சக்கர வாகனத்தில் புறப்பட்டார். நிகழ்ச்சியில் மேயர் உதயகுமார், மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, ஆவடி  தெற்கு கழக மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், ஆவடி வடக்கு நகரச் செயலாளர்  ஜி.நாராயண பிரசாத்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று கொடியசைத்து அருணை மூன்று சக்கர வாகனத்தில்  வழியனுப்பி வைத்தார்.

இந்த பசுமைப்பயணம் ஆவடியில் தொடங்கி திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, மதுரை, கம்பம், முல்லை பெரியார் அணை வழியாக ஜான் பென்னிகுவிக் மணிமண்டபம் வரை செல்கிறார். பின்னர் கீழ் முகாம் பகுதியில் கம்பம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுடன் மரக்கன்று நடுகின்றனர். இழந்துவிட்ட பசுமையை மீட்டெடுக்க ஒரேவழி நாம் ஒவ்வொருவரும் மரங்களை நட்டு பராமரிப்பதுதான் என்றார் அமைச்சர்.  

நிகழ்ச்சியில் மேயர் உதயகுமார், மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, ஆவடி தெற்கு கழக மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், ஆவடி வடக்கு நகரச் செயலாளர் ஜி.நாராயண பிரசாத்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Related Stories: