மனைவி கொலை கணவனுக்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (43). மனைவி பத்மா (42). இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்றுவிட்டார். கணவன் நாகேந்திரன் கடந்த 20.7.2015 அன்று ஆவடி ரெட்டிப்பாளையம், சின்னம்மன் கோயில் தெருவில் உள்ள மனைவி பத்மா வீட்டிற்கு சென்று வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் மனைவி பத்மா வர மறுத்துள்ளார்.

நாகேந்திரன் மீண்டும் மாலையில்  வீட்டுக்கு சென்று அழைத்துள்ளார். அப்போது வந்த மனைவி பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இது குறித்து ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா தேவி மனைவியை பிளேடால் அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் நிரூபிக்கப்பட்டது. இதனால் கணவர் நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: