படுக்க இடம் பிடிப்பதில் தகராறு வாலிபருக்கு கத்திக்குத்து

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலைய பணிமனையில், அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி ஒப்பந்தம் அடிப்படையில் நடைபெறுகிறது. இங்கு, கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (23), சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (23) ஆகியோர் வேலை செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு, தூங்குவதற்காக இவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தனர்.

அப்போது இடம் பிடிப்பதில் இவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த வினோத்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரை சரமாரியாக குத்தினார். தகவலறிந்த கோயம்பேடு போலீசார் அங்கு விரைந்து, படுகாயமடைந்த  சதீஷ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து  வழக்கு பதிந்து, வினோத்குமாரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: