8வது மண்டல பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

அண்ணாநகர்: பராமரிப்பு பணி காரணமாக, 8வது மண்டலத்தில், 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது, என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புரசைவாக்கம் பகுதியில் உள்ள பிரதான குழாயில் அவசர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், 8வது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர், வில்லிவாக்கம், டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் இன்றும், நாளையும் என 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பராமரிப்பு பணி காரணமாக, இந்த மண்டலத்தில், இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். எனவே,   பொதுமக்கள் அவசர குடிநீர் தேவைக்கு 81449 30908 என்ற எண்ணின் தொடர்பு கொள்ளலாம். மேலும், 8வது மண்டலத்துக்குட்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாகவும் தெரிவிக்கலாம்,’’ என்றனர்.

Related Stories: