×

இந்திய எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது

புதுடெல்லி: இந்திய பெண் எழுத்தாளர் கீதாஞ்சலி க்கு, ‘சர்வதேச புக்கர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண் எழுத்தாளர் இந்த விருதை பெறுவது இதுவே முதல்முறை.உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்பில் வெளியான நூல்கள், நாவல்கள், புதினங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இவற்றில் ஆண்டுதோறும் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக  அதற்கு சர்்வதேச புக்கர் விருது அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலை  லண்டனில் 5  நீதிபதிகள் கொண்ட தேர்வு குழு தேர்வு செய்துள்ளது. அதில், டெல்லியைச் சேர்ந்த இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி க்கு, சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ள முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமையை கீதாஞ்சலி  பெற்றுள்ளார். தேசி ராக்வெல் என்பவரால், ‘டோம்ப் ஆப் சாண்ட்’ என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இவரது நாவலான, ‘ரெட் சமாதி’ புத்தகம்தான் இந்த விருதை வென்றுள்ளது. இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தி மொழி புத்தகமும் இதுதான்.  நாட்டில் நடக்கும்  பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.





Tags : To the Indian writer International Booker Prize
× RELATED உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக...