5,300 கோடிக்கு சொத்து ஹெட்டிரோ தலைவர் சாரதி இந்தியாவின் பணக்கார எம்பி: சொந்தமாக கார் மட்டும் இல்லை

ஐதராபாத்: இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார எம்பி என்ற பெருமையை, ‘ஹெட்டிரோ’ மருந்து குழுமத்தின் தலைவர் பண்டி பார்த்த சாரதி ரெட்டி பெற உள்ளார்.பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் சார்பில், ‘ஹெட்டிரோ’ மருந்து குழுமத்தின் தலைவர் பண்டி பார்த்த சாரதி ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தனது  வேட்பு மனுவில் தனக்கும், தனது மனைவிக்கும் ₹5,300 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக கணக்கு காட்டி உள்ளார். இதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார எம்பி என்ற பெருமையை இவர் பெற உள்ளார்.

இவரிடம் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகளும், மனைவியிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகளும் உள்ளதாம். இவ்வளவு பெரிய பணக்காரர்களான இவருக்கும் சொந்தமாக கார் இல்லை என்று பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.இப்போதைக்கு ராம்கி

நிறுவன தலைவர் தான் ஆந்திராவில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராம்கி குழுமத்தின் நிறுவனர் அல்ல அயோத்ய ராமி ரெட்டி, ரூ.2,577 கோடியுடன் பணக்கார எம்பி.யாக இருந்து வருகிறார். அடுத்த மாதம் இந்த பணக்கார பட்டம், பார்த்த சாரதிக்கு செல்ல உள்ளது.

Related Stories: