ஆந்திரா, லடாக் உட்பட 6 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரை

புதுடெல்லி: ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட ஆறு மாநில உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த கொலிஜியம் ேநற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆந்திரா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அஹ்சானுத்தின் அமானுல்லா பாட்னா உயர் நீதிமன்றத்துக்கும், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சித்த ரஞ்சன் தாஸ் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கும்,  திரிபுரா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சுபாசிஸ் தலபத்ரா ஒடிசா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி லனுசுங்கும் ஜமீர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்துக்கும்,  ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற நீதிபதி தீரஜ் சிங் தாக்கூர் மும்பை உயர் நீதிமன்றத்துக்கும், மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கும் மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று, ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் விரைவில் ஆணை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: