அமெரிக்க அரசு இணையதளங்களில் இந்தி மொழி சேர்ப்பு

வாஷிங்டன்:  ஆசிய-அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக ஹவாய், பசிபிக் தீவுகள் ஆணையத்தின் கூட்டம் இம்மாத துவக்கத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் மாளிகை ஆணையம், அரசின் இணையதளங்களை இந்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மற்றும் பிற ஆசிய மொழிகளில் மொழி பெயர்க்க பரிந்துரைத்தது.

 இதை தொடர்ந்து, ஆசிய-அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மற்றும் பசிபிக் தீவுகளில் வசிப்பவர்கள் பற்றிய அதிபரின் ஆலோசனைக் குழுவானது இது தொடர்பான பரிந்துரைகளுக்கு  ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், இது குறித்த இறுதி முடிவை அதிபர் மாளிகை தான் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: