பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மனம் நெகிழ்ந்து சென்றிருக்கிறார்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை:  சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை  அலுவலத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி:சென்னை வந்த  பிரதமருக்கு பாஜ சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் வருகைக்காக கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். தமிழ் கலாச்சாரத்தை தனது தோளிலே தூக்கி, நம்  மண்ணின் மீது எவ்வளவு மரியாதை இருக்கிறது. எப்படி நம் மண்ணை நேசிக்கிறேன்  என்று பிரதமர் பேசும் ஒவ்வொரும் வார்த்தையும் நமக்கு தெரிந்தது. இலங்கையில்  இருக்கிற நமது தமிழ் சொந்தங்களுக்கு தமிழ்நாட்டிற்காக செய்து  இருக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் கோடிட்டு பிரதமர் பேசியிருக்கிறார். பிரதமர் மனம் நெகிழ்ந்து  இங்கே இருந்து சென்று இருக்கிறார். எந்த மாநிலத்திற்கும் இல்லாத கவுரவத்தை  தமிழகத்திற்கு கொடுத்து இருக்கிறார்.

தனது டிவிட்டர் பதிவில், “தமிழக  மக்களுக்கு நன்றி சொல்லி, உங்களுடைய வரவேற்பு ஏற்பாடுகள் என்னை மனம் நெகிழ  செய்து இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை ₹5,  ₹4 குறைக்கிறேன் என்று சொல்லப்பட்டது. காஸ் சிலிண்டர் விலையை ₹200  குறைக்கிறேன் என்று கூறப்பட்டது. விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற 31ம் தேதி கோட்டையை நோக்கி நடைபயணம் செய்து முற்றுகையிட  போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: