‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ போட்டி: வெற்றி பெற்ற குயின் ஸ்பிரிட் குதிரைக்கு ரூ.21 லட்சம் பரிசு

ஊட்டி: ஊட்டியில் நடந்த ‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்ேடக்ஸ்’ குதிரை பந்தய போட்டியில் குயின் ஸ்பிரிட் குதிரை வெற்றி பெற்றது. அதன் உரிமையாளருக்கு ரூ.21 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. கோடை விழாவையொட்டி, மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயம் ஊட்டி ரேஸ்கோர்சில்  கடந்த 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க, பெங்களூர், சென்னை, புனே உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் ஊட்டி வந்துள்ளன.

தினமும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்து வருகிறது. முக்கிய போட்டிகளில் ஒன்றான ‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ கிரேட் 1 போட்டி நேற்று நடந்தது. இதில், 12 குதிரைகள் பங்கேற்றன. 1600 மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் குயின் ஸ்பிரிட் என்ற குதிரை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற குதிரைக்கு ரூ.21 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அந்த குதிரையின் உரிமையாளர் மற்றும் ஜாக்கி ேஷர்வன் ஆகியோருக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் பந்தயம் நடந்தது. வெற்றி பெற்ற குதிரைகளுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன.

Related Stories: