திருவண்ணாமலை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பலகோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்து, அதை தமிழகத்தில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் பெயர்களில் கூடுதல் விலைக்கு விற்று இடைத்தரகர்களும், அதிகாரிகளும் லாபம் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தியது.

முறைகேடு தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளராக பணிபுரிந்து, தற்போது நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் கோபிநாத் என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர். அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்மூட்டைகளை கொண்டு வராமல், நேரடியாக கிடங்கிற்கு கொண்டு சென்று விவசாயிகளின் பெயர்களில் வியாபாரிகளுக்கு பணம் தரப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.  

Related Stories: