காதல் மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்த மாமியார்: குழவிக் கல்லை போட்டு கொன்ற மருமகன் கைது

நாமக்கல்: காதல் மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருப்பதாக கூறி, மாமியார் தலையில் குழவிக் கல்லை போட்டு கொலை செய்துள்ளார் மருமகன். ஒருதலையாக காதலித்த இளைஞருக்கு மகளை திருமணம் செய்து வைய்த்த பிறகும் இருவரும் சேர்ந்து வாழ மாமியார் அனுபதிக்காதது ஏன் என்ன நடந்தது திருச்செங்கோட்டில்?

 நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டியை சேர்ந்தவர் 40 வயதன கோகிலா , கணவனை இழந்த அவருக்கு ஆர்த்தி என்ற மகளும் வசந்த குமார் என்ற மகனும் உள்ளனர் 3 வருடத்துக்கு முன் லாரி பாடி பில்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த கார்த்தி ஒரு தலையாக ஆர்த்தியை காதலித்ததாக தெரிகிறது. ஆர்த்தியின் தயார் கோகிலா விடம் பெண் கேட்டு சென்ற கார்த்தி இருவிட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மான்குட்டி பாளையதில் வசித்து வந்துள்ளார். திருமணம் ஆன ஒரு வாரத்தில் கார்த்திக்கு வலிப்பு வந்ததாகவும் அதனால் பயந்து போன ஆர்த்தி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

மனைவியை பிரிந்து மான்குட்டி பாளையதில் தனியாக வசித்து வந்த கார்த்தி அவ்வப்போது  மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து வந்துள்ளார், ஆனால் அவர் கார்த்தி உடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரு மாதத்துக்கு முன் கருவேப்பம்பட்டி உள்ள மாமியார் வீட்டுக்கு அருகிலேயே வாடகைக்கு விடு பார்த்து குடிவந்துள்ளார். அப்போதாவது மனைவி தன்னுடன் குடும்ப நடத்த வருவார் என எதிர்பத்துள்ளார். தினமும் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு கார்த்தி அழைத்துள்ளார், அணல் அவர் வராததால் மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ மாமியார் கோகிலா தான் தடையாக இருப்பதாக நினைத்துள்ளான். நேற்று மலை மாமியார் வீட்டிற்கு சென்ற பொது ஆர்த்தி வேளைக்கு சென்று உள்ளர் அவரை அழைக்க அவரது தம்பி வசந்த குமார் சென்றுள்ளார் தனியாக இருந்த கோகிலா விடம்  மனைவி ஆர்த்தியை தன்னுடன் குடும்ப நடத்த அனுப்பிவைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.

தனது மகளுக்கு சேர்ந்து வாழ விருப்பம் இல்லையென்றும் அவள் வரமாட்டாள் என கூறியதாக தெரிகின்றது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஆத்திரம் அடைந்த மருமகன் கார்த்தி வீட்டு வாசலில் இருந்த குழவிக் கல்லை தூக்கி மாமியார் கோகிலா தலையில் போட்டுள்ளார் இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த கோகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஆத்திரத்தில் மாமியாரை கொலைசெய்த கார்த்தி எங்கேயும் ஓடாமல் விட்டு வாசலிலேயே அமைந்துள்ளார் வீடு திரும்பிய ஆர்த்தி மற்றும்  வசந்த குமார் ரத்த வெள்ளத்தில் தாய் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அனுப்பினார் சம்பவ இடத்திற்கு சென்ற திருச்செங்கோடு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பதிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டு வாசலில் அமர்ந்த கார்த்தியை கைது செய்தனர். காதல் மனைவியுடன் வாழவிடவில்லை என மாமியார் தலையில் கல்லை போட்டு, மருமகன் கொலை செய்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: