சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, கஞ்சா உட்பட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 09 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில்,

கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 20.05.2022 முதல் 26.05.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 09 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 குற்றவாளிகள் கைது.

51 கிலோ 170 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.60,270/-, 06 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம், 2 ஆட்டோக்கள் மற்றும் 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக P-2 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கடந்த 24.05.2022 அன்று பெரம்பூர், மங்களபுரம், ரயில் நிலையம் பின்புறம் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்த சில நபர்களை நிறுத்த முற்பட்ட போது, அவர்கள் தப்பியோடவே காவல் குழுவினர் மேற்படி நபர்களில் இருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்து பைகளை சோதனை செய்த போது பைகளில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 1.மோகன், வ/23, த/பெ.பாபு, 17வது மத்திய குறுக்குத் தெரு, எம்.கே.பி நகர், சென்னை மற்றும் 2.தினேஷ் குமார், வ/24, த/பெ.சண்முகம், சீலநாயக்கன்பட்டி, சேலம் மாவட்டம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 44 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும்  1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மேற்படி நபர்கள் ஆந்திராவிலிருந்து. சென்னைக்கு இரயில் மூலம் கஞ்சாவை கடத்தி கொண்டு வந்து, சேலத்திற்கு கார் மூலமாக கடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. K-8 அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த 20.05.2022 அன்று அரும்பாக்கம், 100 அடி ரோட்டில் காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.சேது மாதவன், வ/61, த/பெ.குட்டி கிருஷ்ணன், எண்.36, கல்யாண இல்லம், வி.கே.என் நகர், துடியலூர்,

கோயம்புத்தூர் மாவட்டம் 2.தீனதயாளன், வ/63, த/பெ.நாகராஜ், எண்.15, கோவிந்தசாமி லே அவுட், கோயம்புத்தூர் மாவட்டம் 3.மாணிக்கம், வ/45, த/பெ.இருளாண்டி, பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.2 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், ரொக்கம் ரூ.60,000/- மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்  குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 21.05.2022 அன்று  வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 1.மணிகண்டன் (எ) பாட்டில் மணி, வ/23, த/பெ.ராஜா, எண்.7, வெங்கடகிருஷ்ணன் தெரு, பழையவண்ணாரப்பேட்டை, சென்னை 2.சத்யா (எ) லொடுக்கு சத்யா, வ/24, த/பெ.வரதராஜன்,

எண்.796, கிழக்கு கல்லறை சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை 3.அந்தோணி (எ) ஆண்டோ, வ/21, த/பெ.ஸ்டாலின், எண்.8, வெங்கட கிருஷ்ணன் தெரு, பழையவண்ணாரப்பேட்டை, சென்னை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து  2.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: