சிட்னி: சிட்னி நகரில் நிலவிய அடர்ந்த மூடுபனியால், நகரில் உள்ள வானுயர்ந்த பிரமாண்ட கட்டிடங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் பனியால் மூடப்பட்டன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அதிகாலை கடுமையான மூடுப்பனி நிலவி வருகிறது. இதனால் எதிரே வரும் ஆட்கள், கட்டிடங்கள் கண்ணுக்கு புலப்படாத வகையில் பனி படந்துள்ளது. கடும் பனிமூட்டத்தால், சிட்னி நகரில் உள்ள வானுயர்ந்த பிரமாண்ட கட்டிடங்கள் மற்றும் துறைமுகப் பாலம் மற்றும் சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற நினைவு சின்னங்களும் பனியால் மூடப்பட்டன.