நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நாகை: நாகை மாவட்டம் காரைக்கால்மேடு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 10-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் அவர்களை நேரில் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். உடனடியாக மருத்துவ குழு காரைக்கால்மேடு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டது. கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதே, வாந்தி, மயக்கத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

Related Stories: