துப்பாக்கி சூட்டில் 21 பேர் இறந்த சோகம் : ஆசிரியையின் கணவர் ‘ஹார்ட் அட்டாக்’கில் சாவு

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் அடுத்த உவால்டே பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 19 மாணவ, மாணவியர், 2 ஆசிரியைகள் 18 வயது இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலியான இரண்டு ஆசிரியைகளில் ஒருவரான இர்மா கார்சியாவின் கணவர் ஜோ கார்சியா, திடீரென மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 24 ஆண்டுகளுக்கு முன் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது. நான்கு குழந்தைகளை உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோ கார்சியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக காலமானார். இவரது மறைவுக்கு சமூக வலைதளத்தில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், உவால்டே நகரில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அமெரிக்காவில் துப்பாக்கிச் சட்டத்துக்கு எதிரான இயக்கமாக மாறிவருகிறது. இந்த சம்பவம் குறித்து விளையாட்டு பிரபலங்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், தனியார் அமைப்பு சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில், அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி உரிம சட்டங்களை கடுமையாக்குவற்கு ஆதரவு தெரிவித்தனர். அதாவது 54 சதவீதம் பேர் துப்பாக்கி விற்பனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும், 30 சதவீதம் பேர் துப்பாக்கிச் சட்டங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்றும், 16 சதவீதம் பேர் துப்பாக்கிச் சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Related Stories: