சரத்பவார் குறித்து சர்ச்சை கருத்து வழக்கு நடிகையின் ஜாமீன் மனு நிராகரிப்பு: தானே நீதிமன்றம் அதிரடி

தானே: சரத்பவார் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை கேதகி சிதாலேவியின் ஜாமீன் மனுவை தானே நீதிமன்றம் நிராகரித்தது. மேற்குவங்க மாநில மராத்தி டிவி நடிகையும், திரைப்பட நடிகையுமான கேதகி  சிதாலே கடந்த சில தினங்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்  குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதில், ‘உங்களுக்கு நரகம்  காத்திருக்கிறது. நீங்கள் அவர்களை (குறிப்பிட்ட பிரிவினர்)  வெறுக்கிறீர்கள்’ என்று ெதரிவித்திருந்தார். இவரது கருத்து பெரும்  சர்ச்சையான நிலையில், கேதகி சிதாலே மீது ஐபிசி பிரிவுகள் 500, 501, 153ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப்  பதிவு செய்து மே 15ம் தேதி கைது செய்தனர்.

தொடர்ந்து போலீஸ் காவல் முடிந்து அவரை ஜூன் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தானேயில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கேதகி சிதாலே மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த மாஜிஸ்திரேட் பிஎச் பர்மர், வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கடுமையானதால், நிவாரணம் வழங்க முடியாது எனக்கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால், அவர் மீண்டும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: