உடுமலை, அமராவதி வனசரகத்தில் செல்போன் செயலி, ஜிபிஆர்எஸ் கருவி உதவியுடன் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அமராவதி, உடுமலை வனசரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. செல்போன் செயலி மற்றும் ஜிபிஆர்எஸ் கருவிகளின் உதவியுடன் கணக்கெடுப்பு பணிகளில் வனப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த ஆணைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனசரகங்கள் அமைந்துள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், கீரிப்பிள்ளை, காட்டுபன்றி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், உடுமலை, அமராவதி வனசரகத்தில்கோடைகால கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியுள்ளது.

கணக்கெடுக்கும் பணி வரும் 31-ம் தேதி வரை முழுநாட்கள் நடைபெற உள்ளது. உடுமலை, அமராவதி வனசரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொலுமம் உட்பட பல்வேறு இடங்களில் 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. வனப்பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜிபிஆர்எஸ் கருவிகளின் உதவியுடன் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வனச்சரகர் உள்ளிட்ட அலுவலர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.       

Related Stories: