ஓமந்தூரார் தோட்டத்தில் கலைஞரின் சிலை திறப்புக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மும்முரம்!: இந்தி திணிப்பு எதிர்ப்பு உட்பட 5 கட்டளைகள் பீடத்தில் பொறிப்பு..!!

சென்னை: சென்னை அண்ணா சாலையில் கலைஞரின் சிலை நாளை திறக்கப்படும் நிலையில், அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவரும், முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவருமான மூத்த அரசியல் தலைவர் கலைஞருக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சிலை திறக்கபட உள்ளது. 14 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் வெண்கலத்தில்  கலைஞரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி உள்ளிட்ட கலைஞரின் 5 கட்டளைகள் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கைய நாயுடு நாளை மாலை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நுழைவு வாயில் அலங்காரம், வண்ண விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

Related Stories: