சற்று ஏற்றம் கண்ட தங்க விலை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.4,775-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.66.60-க்கு விற்கப்படுகிறது. அட்சயதிரிதியை கடந்த 3ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தாண்டு அட்சயதிரிதியை அன்றும், முந்தைய நாள் என 2 நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.856 குறைந்தது. இதனால், அட்சயதிரிதியை அன்று நகை விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக இருந்தது.

அதைத் தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.கடந்த 18ம் தேதி தங்கம் விலை கிராம் ரூ.4,739க்கும், சவரன் ரூ.37,912க்கும் விற்கப்பட்டது. 19ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 20ம் தேதியும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,793க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,344க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  

நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.38,120-க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்த நிலையில், இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.4,775-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.66.60-க்கு விற்கப்படுகிறது.

Related Stories: