வடக்கு, தெற்கு என பிரிக்காதீங்க: கமல், அக்‌ஷய் குமார் வேண்டுகோள்

சென்னை: திரையுலகை வடக்கு, தெற்கு என பிரிக்க வேண்டாம் என்று நடிகர்கள் கமல்ஹாசன், அக்‌ஷய் குமார் வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அக்‌ஷய் குமார் பேசும்போது, ‘தெற்கு, வடக்கு என்கிற விவாதம் அதிகரித்துவிட்டது. மீடியா இதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு படமும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையிலேயே உருவாகிறது. தென்னிந்திய சினிமா, வட இந்திய சினிமா என்று யாராவது பிரித்துச் சொன்னால் அதை வெறுக்கிறேன். அதோடு, பான் இந்தியா படங்கள் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. எல்லா மொழியும் மதிப்புக்குரியவை. இதில் பிரச்னை செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்றார். கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் கூறுகையில், ‘நான் எப்போதும் என்னை இந்தியனாகவே பார்க்கிறேன். இந்தியாவின் எந்த பகுதியிலும் நான் வசதியாக இருக்க முடியும். அதுதான் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் அழகு. வடக்கிலும், தெற்கிலும் இருக்கும் அபாரமான திறமைகளை நான் அறிவேன். அதனால் அதைப் பிரித்துப் பார்க்கவே கூடாது’ என்று சொன்னார்.

Related Stories: