சொல்லிட்டாங்க...

* அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே, பெண்கள் அதிக அளவில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

* பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதில் ஒரு சிறு பகுதியை குறைத்துவிட்டு, அதை மக்களின் மீதான கரிசனமாக முன்வைப்பது மோடியின் ஏமாற்று நாடகமே. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

* இளைஞர்களுக்கு வருடந்தோறும் தலா 2 கோடி புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என அறிவித்தாலும் அதன்படி எதுவும் நடக்கவில்லை. - தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

* கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியாவில் பெறப்பட்ட மொத்த வெளிநாட்டு தொழில் முதலீட்டில் கர்நாடகாவின் பங்களிப்பு 42 சதவீதம். - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

Related Stories: