பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு மண்டல துணை பிடிஓ அதிரடி பதவியிறக்கம்: தூத்துக்குடி கலெக்டர் நடவடிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன். இவர். திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியனில் பணியாற்றிய போது, பெண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். அந்த பெண் ஊழியர் அளித்த புகார் மீது விசாரணை நடந்தது. இதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாராயணன் தற்போது வகிக்கும் பதவியில் இருந்து இரு நிலை கீழிறக்கம் செய்யப்பட்டார். அதன்படி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் இருந்து, இளநிலை உதவியாளராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கலெக்டர் செந்தில்ராஜ் பிறப்பித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தனக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தலை துணிச்சலுடன் புகார் செய்ததை பாராட்டினார். பிற பெண் ஊழியர்களும் தைரியமாக எதிர்த்து நிற்கும் வகையில், பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 பிரிவு 13, 15(அ)ன் படி குற்றம் புரிந்த அரசு ஊழியரின் ஊதியத்தில் ரூ.10 ஆயிரத்தை பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Stories: