பிற்படுத்தப்பட்டோர் ஆணைய கூட்டத்தில் உள் இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பிற்படுத்தப்பட்டோர் ஆணைய கூட்டத்தில் உள் இடஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்க கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த பிரேசில், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், அரசின் உள்இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதை எதிர்த்த வழக்கில், ஐகோர்ட்டின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியது. தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூட்டம் வரும் 31ம் தேதி நடக்க உள்ளது. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் உள்ள உள் இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக விவாதிக்க உள்ளனர். இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே, இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், 31ம் தேதி நடக்கும் ஆணைய கூட்டத்தில் உள்இடஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்கவோ, முடிவெடுக்கவோ கூடாது எனக்கூறி, மனுவிற்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர். 

Related Stories: