பல்கலை.கள் வேந்தர் பதவி ஆளுநரிடம் இருந்து பறிப்பு: மேற்கு வங்கத்தில் மம்தா அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செயல்படும் பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமிப்பதற்கு, அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜெகதீப் தங்காருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மாநில அரசின் நிர்வாக செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவதாக  மம்தா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதன் காரணமாக, ஆளுநரின் அதிகாரங்களை பறித்து மட்டம் தட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக, மேற்கு வங்கத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் தன்னையே வேந்தராக நியமிப்பதற்கான முடிவுக்கு அமைச்சரவையில் நேற்று ஒப்புதல் பெற்றுள்ளார். அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று இம்மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு நேற்று தெரிவித்தார். தற்போது, இந்த பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநரே இருந்து வருகிறார். 

Related Stories: