×

பைனலுக்கு எந்த ராயல்? ராஜஸ்தான் -பெங்களூர் மோதல்: இன்று 2வது தகுதிச் சுற்று

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலபரீட்சை நடத்த உளளனர். ஐபிஎல் தொடரில் முதல் தகுதிச் சுற்று(குவாலிபயர்) ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. தோற்றாலும் ராஜஸ்தான் 2வது தகுதிச் சுற்றில் ஆடும் வாய்ப்பை பெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த வெளியேறும் சுற்று(எலிமினேட்டர்) ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜயன்ட்சை வீழ்த்திய பெங்களூர் 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

அதனால் இன்று நடைபெறும் 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான்-பெங்களூர் என 2 ராயல் அணிகள் களம் காண உள்ளன. ஏற்கனவே முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் கடைசி ஓவர் வரை போராடிதான் தோற்றது. அதனால் இன்று பெங்களூரை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது. அந்த அணியின் பட்லர் மீண்டும் ஆட்டத்திறனுக்கு திரும்பியுள்ளது. அணியில் கூடுதல் பலமாக தெரிவிகிறது. கூடவே ஜெய்ஸ்வாஸ், கேப்டன் சாம்சன், படிக்கல் , ஹெட்மையர், அஷ்வின், போல்ட், சாஹல், பிரசித் என அதிரடி வீரர்களின் பட்டியல் நீளுகிறது.

அதேபோல் பெங்களூர் அணியிலும் கேப்டன் டூ பிளெஸ்ஸி, கோஹ்லி, ரஜத், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல், சிராஜ், ஹர்ஷல் என அதிவேக வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் வெளியேறும் சுற்றில் பெங்களூர் 207ரன் குவித்தும் கடைசி ஓவர் வரை வெற்றிக்காக போராட வேண்டியிருந்தது. அதனால் இரண்டு அணியிலும் எந்த அணி வீரர்கள் பொறுப்புணர்ந்து விளையாடுகிறார்களோ அந்த அணி இறுதி ஆட்டத்தில் குஜராத் அணியை சந்திக்கும். அதற்கு 2 அணியும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய ஆட்டமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

* இதுவரை...
ராஜஸ்தான்-பெங்களூர் அணிகள் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்குநேர் சந்தித்துள்ளன. அவற்றில் பெங்களூர் 13 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 11 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன. மேலும் 3 ஆட்டங்கள் கைவிடப்பட்டன. இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக ராஜஸ்தான் 217ரன்னும், பெங்களூர் 200ரன்னும் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக பெங்களூர் 78ரன்னும், ராஜஸ்தான் 58ரன்னும் எடுத்துள்ளன.

* இந்த தொடரில்..
நடப்புத் தொடரின் லீக் சுற்றில் இந்த 2 அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. ஏப்.5ம் தேதி நடந்த முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஏப்.26ம் தேதி நடந்த 2வது லீக் ஆட்டத்தில்  ராஜஸ்தான் 29ரன்னில் வெற்றிப் பெற்றது.

Tags : Royal ,Rajasthan ,Bangalore , Which Royal for the final? Rajasthan-Bangalore clash: 2nd qualifying round today
× RELATED கொல்கத்தாவுடன் இன்று மோதல்: நெருக்கடியில் ஆர்சிபி