பாரத் பெட்ரோலிய நிறுவன பங்கு விற்பனை திட்டம் ரத்து

புதுடெல்லி: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் (பிபிசிஎல்) 52.98 சதவீத பங்குகள் ஒன்றிய அரசின் வசம் உள்ளன. இதை தனியார் மயமாக்கும் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு ரூ.90 ஆயிரம் கோடிக்கு நிதி திரட்ட திட்டமிட்டது.இந்நிலையில், ஒன்றிய அரசின் முதலீடுகள் மற்றும் பொது சொத்துகள் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்தடுத்து ஏற்பட்ட கொரோனா அலைகள், புவி அரசியல் நிலைமைகளால் உலகளவில் எண்ணெய் மற்றும் காஸ் தொழில்துறை பாதிப்புக்குள்ளானது. சர்வதேச எரிபொருள் சந்தையில் உள்ள நிலைமையால், விருப்பம் தெரிவித்திருந்த நிறுவனங்கள் தற்போது இதில் பங்கேற்க இயலாத நிலையை சுட்டி காட்டி உள்ளன. இதையடுத்து, பாரத் பெட்ரோலியத்தின் பங்குகள் விற்பன செய்யும் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: