ரயில் மோதி இளம்பெண் பலி

தாம்பரம்: ஊரப்பாக்கம் வெங்கடேஸ்வரா அவென்யூவை சேர்ந்தவர் எமி கார்மைக்கேல் (26). பெற்றோரை இழந்த இவர், வாடகை வீட்டில் தோழிகளுடன் தங்கி, ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் பைக் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு எமி கார்மைக்கேல், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றார். அந்த நேரத்தில், செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் அவர் மீது மோதியது. இதில், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே எமி கார்மைக்கேல் இறந்தார். புகாரின்படி தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: