கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது. மாவட்ட தலைவர் தவமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் மோகன்ராஜ், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொருளாளர் எஸ்.குமார், மாவட்ட பொருளாளர் அருளரசி, தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகி  சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 2003ம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பண பயனை திரும்ப வழங்க வேண்டும். ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தி, கோஷமிட்டனர். பின்னர், கலெக்டர் ராகுல்நாத்தை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.

Related Stories: