காஞ்சி ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது

காஞ்சிபுரம்: காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில், இந்தாண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம் ஸ்ரீ வைகுண்ட வல்லி சமேத வைகுண்ட பெருமாள் பிரம்மோத்சவ பிரகடன பெருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும். இதையொட்டி, இந்தாண்டு பெருவிழா, த்வஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஸ்ரீ வைகுண்ட பெருமாள், வல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிம்ம வாகனத்தில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதை தொடர்ந்து இன்று அம்ச வாகனம், சூரிய பிரபை, நாளை அலங்கரிக்கப்பட்ட கருட சேவையில் வைகுண்ட பெருமாள் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதேபோல் தினமும் அனுமந்த வாகனம் ,சேஷ வாகனம், சந்திரபிரபை, மோகினி அவதாரம், யாழி, யானை, குதிரை ஆகிய வாகங்களிலும், எடுப்பு தேர், பல்லாக்கு, வெண்ணைத்தாழி, பல்லாக்கு தீர்த்தவாரி, புண்ணியகோட்டி விமானம், சப்தாவரணம், முதல் நாள் விடையாற்றி உற்சவம், 2வது விடையாற்றி உற்சவம் நடக்க உள்ளது. இறுதியாக புஷ்ப பல்லக்கில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்க, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசிப்பார்கள். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பூவழகி மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories: