செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் விரைவில் ரூ.1.10 கோடியில் பன்முக உயர்தர தீவிர சிகிச்சை மையம்: டீன் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக ரூ.1.10 கோடியில் பன்முக உயர்தர தீவிர சிகிச்சை மையம், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மருத்துவமனை டீன் முத்துகுமரன் தெரிவித்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைக்கு இணையாக சிகிச்சை அளிக்க நேஷனல் ஹெல்த் மிஷன் மூலம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், ரூ.50 லட்சத்தில் 1 மாத குழந்தை முதல் 12 வயது குழந்தைகள் வரை, அனைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் 12 படுக்கைகள் கொண்ட சிறப்பு பன்முக உயர்தர அதிநவீன சிகிச்சை மையத்தை, கடந்த ஏப்ரல் 14ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து 13 வயது முதல் முதியோர் வரை சிகிச்சை பெற நேஷனல் ஹெல்த் மிஷன் மூலம் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கி வெண்டிலேட்டர், சென்ட்ரல் ஏசியுடன் கூடிய அதிநவீன படுக்கை வசதியுடன் 20 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவை கடந்த வாரம் முதல்வர் வைத்தார். இதையடுத்து, ஓரிரு நாட்களில் மேற்கண்ட 2 அதிநவின சிகிச்சை மருத்துவ மையங்களும்,  பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என செங்கல்பட்டு அரசு மருத்துமனை டீன் முத்துகுமரன் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக, அதிநவீன பன்முக உயர்தர தீவிர சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் 35 அரசு மருத்துவமனைகள், 139 வட்டார ஆரம்ப சுகாதார மையங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனையில் அனைவருக்கும், தனியார் மருத்துவனைக்கு இைணயாக உயர்தர மருத்துவம் கிடைக்கும் என்றார்.

Related Stories: