வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய பைனான்சியர் கைது

பெரம்பூர்: கொளத்தூர் மக்காரம் தோட்டம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கந்தன் (எ) மாரி (28), கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவர், அதே பகுதியில் திருப்பதி பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் வடிவேலு என்பவரிடம் ₹1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில், ₹65 ஆயிரத்தை திருப்பி செலுத்தி உள்ளார். பின்னர், சரிவர வியாபாரம் இல்லாததால் ₹35 ஆயிரத்தை செலுத்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மாரியின் கடைக்கு சென்ற வடிவேலு, ‘ஒரு வாரத்துக்குள் பணத்தை தராவிட்டால் கடையில் இருக்கும் பொருட்களை அள்ளி சென்று விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இதில் மன உளைச்சலில் இருந்த மாரி, 2 நாட்களுக்கு முன், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அதற்கான காரணத்தையும் வீடியோவில் பதிவு செய்து, வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரி தற்கொலைக்கு காரணமான வடிவேலுவை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: