தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கைக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இலவசக் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை, எளிய குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். அதன்படி மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் வரை உள்ளன.

இதற்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 20ம் தேதி தொடங்கியது. தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கைக்கு நேற்று முன்தினம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பத்துள்ளனர். வருகிற 30ம் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: