முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன்  இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 15ம் தேதி அறிவித்தார். ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அனேமாக இந்த இடத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்பி விஸ்வநாதன், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட பல தலைவர்களும் சீட் கேட்டு டெல்லி தலைமையை அணுகி வருகின்றனர். அதே நேரத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். இதற்கிடையே கடந்த 24ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.

 இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் இன்று பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் ேவட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். வருகிற செவ்வாய் கிழமையுடன் வேட்புமனு தாக்கல் முடிகிறது என்பது குறிப்பித்தக்கது. மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடும் திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் ேபாட்டியின்றி தேர்வாவது உறுதியாகி விட்டது. ஒருவேள போட்டியிருக்கும் பட்சத்தில் வருகிற 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: