நிதி வீணடிக்கப்படுவதை தடுக்க குடிமராமத்து திட்டத்தில் 82 பணிகள் கைவிடப்பட்டது: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் 2016ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் மூலம் பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டன. அதன்படி, 2016ம் ஆண்டு ₹99.49 கோடியில் 1513 பணிகளும், 2017-2018ம் ஆண்டில் 30 மாவட்டங்களில் ₹321 கோடியில் 1479 பணிகளும், 2019-2020ம் ஆண்டில் 30 மாவட்டங்களில் ₹498 கோடி மதிப்பில் 1797 பணிகளும், 2020-2021ம் ஆண்டில் 34 மாவட்டங்களில் ₹498 கோடி மதிப்பில் 1387 பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

கடந்த 2020-21ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணிகள்தான் தற்போது நடக்கிறது. இதனால், ₹1417 கோடியில் 6211 பணிகளில் 5,900 முடிக்கப்பட்டுள்ளன. 229 பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணி முடித்தவுடன் நிதியை உடனடியாக விடுவிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நிதி வீணடிக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் 82 பணிகள் தேவையற்றதாக கண்டறியப்பட்ட நிலையில், அந்த பணிகள் கைவிடப்பட்டுள்ளன என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: