கொல்லன்கோவில் பேரூராட்சி சார்பில் புதிதாக ஆட்டு சந்தை துவக்கம்

மொடக்குறிச்சி: கொல்லன்கோவில் பேரூராட்சி சார்பில் கந்தசாமிபாளையம் வாரச்சந்தையில் இன்று முதல் புதிதாக ஆட்டு சந்தை துவங்கியது. சிவகிரி அடுத்த கொல்லன்கோவில் பேரூராட்சி சார்பில் கந்தசாமிபாளையத்தில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை தொடங்க கடந்த மாதம் நடைபெற்ற பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 26ம் தேதி ஆட்டுசந்தை நடைபெறும் என பேரூராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று கொல்லன்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட கந்தசாமிபாளையத்தில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் ஆட்டு சந்தை தொடங்கியது. பேரூராட்சி தலைவர் சந்திரசேகர் தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் காந்தரூபன், பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். இந்த ஆட்டு சந்தைக்கு சிவகிரி, விளக்கேத்தி, எல்லக்கடை, வடுகபட்டி, கந்தசாமிபாளையம் என சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனை வியாபாரிகள் விலைக்கு வாங்கிச் சென்றனர்.

 இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் காந்தரூபன் கூறுகையில், சுற்றுவட்டார பகுதிகளில் எந்த ஆட்டு சந்தையும் இல்லை.முத்தூரில் மட்டுமே ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முத்தூர் சந்தைக்கு சென்று வந்தனர். இதனால் கந்தசாமிபாளையத்தில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையில் ஆட்டுசந்தையை ஆரம்பித்துள்ளோம் என்றார்.

Related Stories: