பூந்தமல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை: மக்கள் மகிழ்ச்சி

பூந்தமல்லி: பூந்தமல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கரையான்சாவடி, குமணன்சாவடி, குன்றத்தூர், மாங்காடு திருவேற்காடு, வேலப்பன்சாவடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. பூவிருந்தவல்லி சுற்றுவட்டார பகுதிகளான செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், திருமழிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்கிறது. திடீரென வானம் இருள் சூழ்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்புவோர் மழையில் நனைந்தபடி செல்கின்றனர். திடீர் மழை காரணமாக பூந்தமல்லியில் முக்கிய சாலையில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

வானம் இருள் சூழ்ந்து மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்களை ஏற்றிச் செல்கின்றனர். காலை முதல் வெய்யில் சுட்டெரித்த நிலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தற்போது பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: