ராகுல்காந்தி வெளிநாடு பயணம்; விளக்கம் கேட்கிறது ஒன்றிய அரசு

புதுடெல்லி: வெளியுறவு துறையின் அனுமதி பெறாமல் பிரிட்டனுக்கு பயணித்த ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் எம்பிக்கள், வெளியுறவு துறை அமைச்சகத்திடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற வேண்டும் என்பது நெறிமுறை. இந்த அனுமதி, பயணத்திற்கு 3 வாரங்களுக்கு முன்னதாக பெறப்பட வேண்டும். பல்வேறு நாட்டு அரசுகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளில் நம் எம்பிக்களுக்கான அழைப்பு, வெளியுறவு துறை அமைச்சகம் வாயிலாகவே அனுப்பப்படும்.

அப்படி இல்லாமல், எம்பிக்கள் நேரடியாக அழைக்கப்படும் போது, ஒன்றிய அரசிடம் இருந்து அரசியல் ரீதியான அனுமதி பெறுவது கட்டாயமாகி றது.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்பி, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சமீபத்தில் சென்றார். அங்கு, கேம்பிரிட்ஜ் பல்கலை., நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். இந்த பயணத்திற்கு, வெளியுறவு துறையின் அனுமதியை ராகுல்காந்தி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப ஒன்றிய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: