ஆந்திர மாநிலத்தில் கார் குளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் கார் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். ரெட்டிவாரி கிராமத்தை சேர்ந்த கங்கிரெட்டி தனது குடும்பத்துடன் திருமணத்துக்கு பலமனேருக்கு காரில் சென்றனர்.மதனப்பள்ளி அருகே புங்கனுரில் கார் வேகமாகச் சென்றபோது சாலையோர கல்வெட்டில் மோதி மொரவப்பள்ளி குளத்தில் கவிழ்ந்தது.காரில் பயணம் செய்த மதுலதா, குஷிதா, தேவன்ஷ் ரெட்டி, கங்கிரெட்டி உள்ளிட்ட 4 பேரும் உயிரிழந்தனர்.தகவல் அறிந்த வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: