குற்றாலத்தில் சாரல் இல்லை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தென்காசி: குற்றாலத்தில் இரண்டு தினங்களாக சாரல் இல்லாததுடன் வெயிலும் காணப்பட்டது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் 15 தினங்கள் முன்னதாக தொடங்கியது. கடந்த 8 தினங்களாக சாரல் நன்றாக பெய்தது. சீசன் களைகட்டி காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சாரல் பெய்யவில்லை. மேலும் வெயிலும் காணப்பட்டது. மாலையில் இதமான காற்று வீசியது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது.

ஐந்தருவியில் நான்கு பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு வரை சாரல் நன்றாக பொழிந்த நிலையில் நேற்று குற்றாலம் வருகை தந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் தண்ணீர் ஓரளவு நன்றாக விழுந்த போதும் சாரல் இல்லாததுடன் வெயில் அடித்ததால் சற்று ஏமாற்றமடைந்தனர்.

Related Stories: