திருவள்ளூரில் 1 கோடி மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியில் தீ விபத்து: போலீஸ் விசாரணை

திருவள்ளுர்: திருவள்ளூரில் 1 கோடி மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கிருந்து ஆர்டர் செய்த சுமார் ஒரு கோடி ரூபாய் பொருட்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு சாலை மார்க்கமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

இதனைதொடர்ந்து லாரி மணவாளநகர் அடுத்த வெங்கத்தூர் பகுதியில் சென்ற போது கண்டெய்னரில் இருந்து புகை மூட்டமாக வந்துள்ளது. இதனையடுத்து வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கிய போது தீப்பிடித்து மளமளவென எரிந்தது. தீ விபத்தில் செல்போன், மடிக்கணினி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: