ஆப்கானிஸ்தான் நாட்டில் மசூதி, பேருந்துகளில் நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் நகரில் உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில் நேற்று மாலை பலர் தொழுகையில் ஈடுபட்டு இருந்த போது, பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல ஆப்கானில் 4வது பெரிய நகரமான மசர் இ சாரிப்பில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதில் 9 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. பால்க் மாகாணத்திலும் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். குண்டு வீச்சு சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆப்கானில் பல்வேறு பகுதியில் 4 முறை குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 70க்கும் மேற்பட்ட மக்கள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். ஆப்கானில் தாலிபான் அரசுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளனர்.

Related Stories: