வீடுகளை நோட்டமிட்டு தனியாக இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை: சைக்கோ வாலிபர் கைது

திருவொற்றியூர்: மாதவரம் பால்பண்ணையை சேர்ந்த 52 வயது பெண் தனது கணவன் இறந்துவிட்டதால் தன்னுடைய மகள் வழி பேத்தியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். கடந்த 19ம் தேதி விடியற்காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. அந்த அவர் எழுந்து கதவை திறந்தபோது வாலிபர் கையில் கத்தியுடன் உள்ளே நுழைந்து அவரின் வாயை பொத்தி கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டினார். சத்தம் கேட்டு அவரது பேத்தி விழித்துக்கொண்டு அந்த மர்ம நபரை பார்த்தவுடன் கூச்சலிட்டு வெளியே ஓடிவந்தார். உடனே அந்த நபர் உள் பக்கமாக தாழ்பாள் போட்டு கொண்டு அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்து அங்கிருந்து அவர் தப்பினார். புகாரின்பேரில் மாதவரம் பால்பண்ணை போலீசார் கொடுங்கையூர் என்.எஸ்.கே 4வது தெருவை சேர்ந்த அரிசி வியாபாரி ராஜேஷை(26), கைது செய்தனர். விசாரணையில், இவர் இரவு நேரங்களில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு மதுபோதையில் பலாத்காரம் செய்ய முயன்றதும் தெரியவந்தது.

Related Stories: