×

குடிநீர் குழாயில் அவசர பராமரிப்பு பணி வேப்பேரி சுற்று பகுதிகளில் நாளை முதல் குடிநீர் நிறுத்தம்: வாரியம் தகவல்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் புரசைவாக்கம், வள்ளியம்மாள் சாலை, இவார்ட் பள்ளி வளாகம் உட்புறத்தில் உள்ள 1050 மி.மீ விட்டம் கொண்ட பிரதான குடிநீர் குழாயில் அவசர பராமரிப்பு பணிகள் நாளை காலை 10.30 மணி முதல் 29ம்தேதி காலை 10.30 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பகுதி-5, வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கொண்டிதோப்பு, சவுகார்பேட்டை, ஏழு கிணறு, ஜார்ஜ்டவுன், பிராட்வே, பகுதி-6, பெரம்பூர், புதுப்பேட்டை, புளியந்தோப்பு, பகுதி-8, கெல்லீஸ், நம்மாழ்வார்ப்பேட்டை, புரசைவாக்கம், செம்பியம், ஓட்டேரி, அயனாவரம், கீழ்ப்பாக்கம் தோட்டம், சேத்துப்பட்டு, டி.பி.சத்திரம், வில்லிவாக்கம் மற்றும் பகுதி-9, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பகுதிப் பொறியாளர்-5 8144930905, பகுதிப் பொறியாளர்-6 8144930906, பகுதிப் பொறியாளர்-8, 8144930908, பகுதிப் பொறியாளர்-9 8144930909 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vepery , Emergency maintenance work on the drinking water pipe will be the first drinking water outage in the Vepery roundabout tomorrow: Board Information
× RELATED பெங்களூர் கராத்தே: வேப்பேரி அகடமி சாம்பியன்