திராவிட மாடல் கொள்கையின்படி அரசு செயல்பட்டு வருகிறது என்பதை சொல்லி கொள்வதில் பெருமைப்படுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏ  டாக்டர் நா.எழிலன், பிரோவின்சியல் சுப்பீரியர் அருட்சகோதரி டாக்டர் பிரான்சிஸ்கோ நிர்மலா,ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி டாக்டர் ரோசி ஜோசப், கல்லூரியின் துணை முதல்வர்கள் டாக்டர் ரிஜி மணிமேகலா, டாக்டர் பெல்பின் சி. கென்னடி,டாக்டர் வித்யா சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:   பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்னிகரற்ற கல்வி நிறுவனமாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மயிலாப்பூரில் ஒரு சிறிய கட்டடத்தின் மாடியில் 32 மாணவியருடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, இன்றைய தினம் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம், உங்களுக்குள் இருக்கும் சமூக நோக்கம் தான் என்பதை அழுத்தந்திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன். கல்வியில் - வேலை வாய்ப்பில் - தொழில் வளர்ச்சியில் - சமூக வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்ட, திராவிட மாடல் கொள்கையின் படி இன்றைய அரசு செயல்பட்டு வருகிறது என்பதை 75 ஆண்டுகால கல்விப் பெருமை கொண்ட இந்த ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி விழாவில் சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமைப்படுகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: